Images
  • taiwan
    (படம்: AFP/Philippe Lopez)

தைவானுடனான உறவு தொடர்பான கொள்கையை மறுபரிசீலனை செய்ய சீனாவுக்கு வேண்டுகோள்

தைவானில் இரண்டாம் தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-wen), தைவானுடனான உறவு தொடர்பான கொள்கையைச் சீனா மறுபரிசீலனை செய்யும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

அண்மைத் தேர்தலில் அவரின் ஜனநாயக முன்னேற்றக் கட்சி மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் அந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இருப்பினும் சீன அதிகாரிகள் "ஒரே சீனா" எனும் கொள்கையில் உறுதியாக உள்ளனர்.

சீன அதிகாரிகள் உண்மை நிலவரத்தை எதிர்கொள்ளவேண்டும் என்றும் தைவானுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் தைவானிய அதிபர் கூறினார். 

Top