Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அமெரிக்காவிலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதி செய்யப்படுவதற்கு எதிராக தைவானில் ஆரப்பாட்டம்

அமெரிக்காவிலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதி செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தைவானில்  ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வாசிப்புநேரம் -

அமெரிக்காவிலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதி செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தைவானில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் நடத்தப்படும் அந்த ஆர்ப்பாட்டத்திற்கு "Autum Struggle" என்று பெயர்.

தைவான் அரசாங்கம் அமெரிக்காவிலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதி செய்வதன் தொடர்பில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் Ractopamine கலந்த பன்றி இறைச்சியை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று தைவானிய அதிபர் சாய் இங் வென் (Tsai Ing-wen) அறிவித்துள்ளார்.

Ractopamine இறைச்சியை மென்மையாக்கப் பயன்படுத்தப்படுகிறது. அந்த வேதிப்பொருள் சேர்க்கப்பட்ட இறைச்சி வகைக்கு ஐரோப்பாவிலும், சீனாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தைவானில் பன்றி இறைச்சி இறக்குமதிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படுகிறது.

தைவானிய எதிர்த்தரப்பு குவாமிந்தாங் (Kuomintang) கட்சி முதன்முறை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள ஆதரவாளர்களைத் திரட்டியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பன்றி இறைச்சி உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அக்கட்சி கூறுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்