Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தலிபான் ஆட்சியை நிலைகுலையைச் செய்யக்கூடாது - அமெரிக்காவை எச்சரிக்கும் தலிபான்

தலிபான் ஆட்சியை நிலைகுலையைச் செய்யக்கூடாது - அமெரிக்காவை எச்சரிக்கும் தலிபான்

வாசிப்புநேரம் -
தலிபான் ஆட்சியை நிலைகுலையைச் செய்யக்கூடாது - அமெரிக்காவை எச்சரிக்கும் தலிபான்

படம்: REUTERS

ஆப்கானிஸ்தானில் தனது ஆட்சியை நிலைகுலையச் செய்யக்கூடாது என்று தலிபான் அமைப்பு அமெரிக்காவிடம் எச்சரித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப்படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய பிறகு முதன்முறையாக நடத்தப்படும் இருதரப்புச் சந்திப்பில் அதுபற்றிப் பேசப்பட்டது.

தோஹாவில் நடக்கும் அந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தை இன்று பின்னேரம் நிறைவடையும்.

தீவிரவாதக் குழுக்களை முறியடிப்பது, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களைப் பத்திரமாக வெளியேற்றுவது, மனிதநேய உதவிப் பணிகள் ஆகியனபற்றி விரிவாகப் பேசப்படுகிறது.

2020 தோஹா உடன்பாட்டின் விதிகளை மதித்துநடக்க இருதரப்பும் இணங்கியிருப்பதாகத் தலிபான் அமைப்பின் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

அமெரிக்காவுக்கும், அதன் கூட்டணிக்கும் அல் -கயீடா போன்ற தீவிரவாதக் குழுக்களிடமிருந்து பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தடுப்பது உள்ளிட்ட அம்சங்களும் அந்த உடன்பாட்டில் உண்டு.

ஆனால் அதுபற்றி அமெரிக்கா எதுவும் சொல்லவில்லை.

தேசிய நலன்களை முன்வைத்துப் பேச்சுவார்த்தையைத் தொடர்வதாகவும், தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்கும் வகையில் அது அமையவில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்