Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பெண்களை யாரும் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்துவைக்க முடியாது: தலிபான்

ஆப்கானிஸ்தானில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தலிபான் அமைப்பு, பெண்கள் உரிமைகளை நிலைநாட்டக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

ஆப்கானிஸ்தானில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தலிபான் அமைப்பு, பெண்கள் உரிமைகளை நிலைநாட்டக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பெண்களின் திருமண உரிமைகளையும், விதவைகளின் உரிமைகளையும் அது குறிப்பிட்டுக் கூறியிருந்தது.

பெண்களை யாரும் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்துவைக்க முடியாது என்றும் கணவனை இழந்த பெண்களுக்குக் கணவனின் சொத்துகளில் உரிமை உண்டு என்றும் அமைப்பு சொன்னது.

பெண்களின் உரிமைகள் குறித்துத் தகவல் வெளியிடுமாறு கலாசார, தகவல் அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டது.

எனினும் பெண்களின் உயர்நிலைக் கல்வியையோ வேலைவாய்ப்பையோ பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மில்லியன் கணக்கான பெண்களின் உயர்நிலைக் கல்வி தடைபட்டுள்ளது.

பொதுத்துறையில் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள், வேலைக்குத் திரும்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் நிதியுதவி அளிக்கப்பட வேண்டுமென்றால், பெண்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என நன்கொடையாளர்கள் பலரும் கூறிவருகின்றனர்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்