Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை முடக்கநிலை நீட்டிப்பு

COVID-19: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை முடக்கநிலை நீட்டிப்பு

வாசிப்புநேரம் -
COVID-19: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை முடக்கநிலை நீட்டிப்பு

(படம்: AFP / Dibyangshu SARKAR)

தமிழ்நாட்டில், COVID-19 நோய்ப்பரவல் காரணமாக நடப்பிலுள்ள முடக்கநிலை, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தகவலை, மாநில முதலமைச்சர் பழனிச்சாமி இன்று அறிவித்தார்.

இருப்பினும், சில கட்டுப்பாடுகள் தமிழ்நாட்டில் தளர்த்தப்படுவதாக அவர் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளான 2, 9, 16, 23, 30 ஆம் தேதிகளில் கடுமையான முழுநேர முடக்கம் நடப்பில் இருக்கும்.

கிருமித்தொற்று அதிகமுள்ள சென்னை நகரில் கடைகளுக்கு விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாக "THE HINDU" நாளேடு குறிப்பிட்டது.

உணவகங்களும் தேநீர்க்கடைகளும், பாதி அளவுள்ள வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றலாம்.

பொட்டலமிட்டு உணவை விற்பதற்கான அனுமதி, காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இப்போது உள்ளதுபோல் தொடரலாம் என முதல்வரின் அறிக்கை குறிப்பிட்டது.

மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு சிறிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்கப்பட அனுமதியுண்டு.

ஆனால், அவை சில நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்