Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மக்களின் சீற்றத்தைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய விளம்பரத்தை அகற்றிய தனிஷ்க் நகைக் கடை

இந்தியாவின் பிரபலமான தனிஷ்க்  நகைக் கடை, வளைகாப்பு விழாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட விளம்பரத்தை மீட்டுக்கொண்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

இந்தியாவின் பிரபலமான தனிஷ்க் நகைக் கடை, வளைகாப்பு விழாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட விளம்பரத்தை மீட்டுக்கொண்டுள்ளது.

ஒரு முஸ்லிம் குடும்பம், இந்து மருமகளுக்கு வளைகாப்பு நடத்துவது போல் அமைந்திருந்தது அந்த விளம்பரம்.

தனிஷ்க் நகைக் கடை, பார்ஸி சமூகத்தினரால் நடத்தப்படுகிறது.

ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் குறிக்கும் விதத்தில், பலதரப்பு மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவது போல் விளம்பரத்தைத் தயாரிக்க விரும்பியதாக நிறுவனம் சொன்னது.

ஆனால் அது தங்கள் உணர்வைப் புண்படுத்துவதாக கொள்கைப் பிடிப்புமிக்க இந்துக்கள் சிலர் இணையத்தில் பதிவிட்டனர்.

மேலும் குஜராத் மாநிலத்தில் தனிஷ்க் கடைகள் சில தாக்கப்பட்டதாக NDTV செய்தி நிறுவனம் தெரிவித்தது.

'உணர்வுகளைத் தூண்டவேண்டும் என்பது நோக்கமல்ல. இருப்பினும் விளம்பரம் சிலருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதால், அதை மீட்டுக்கொள்கிறோம்' என்று நிறுவனம் தெரிவித்தது.

இருப்பினும், Twitter தளத்தில் பலர் #BoycottTanishq என்ற வாசகத்துடன் தொடர்ந்து நிறுவனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்