Images
  • Tapeworm
    (படம்: Wikipedia Commons)

சீனா: 'சூப்' அருந்தியதால் மூளையில் புழுக்கள்


சீனாவில் கட்டுமான ஊழியர் வலிப்பால் அவதியுற்றதற்குக் காரணம் மூளையில் புழுக்கள் இருந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்த 46 வயது ஆடவர் சரியாகச் சமைக்கப்படாத இறைச்சியை உண்டதால் அவருடைய மூளையில் 'tapeworms' எனும் புழுக்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.

ஆடவர் கடந்த மாதம் பன்றி, ஆட்டு இறைச்சி கொண்ட 'சூப்' (soup) சாப்பிட்டதாக CNN தெரிவித்துள்ளது.

சில நாள்களுக்குப் பின் மயக்கம், தலைவலி, வலிப்பு ஆகியவற்றால் ஆடவர் பாதிக்கப்பட்டார்.

செச்சியாங் பல்கலைக்கழக மருத்துவமனையில் (Zhejiang University hospital) ஆடவரின் மூளையைப் பரிசோதனை செய்ததில் அதில் புழுக்கள் இருந்தது தெரியவந்தது.

ஆடவரின் மூளையிலிருந்து புழுக்களை அகற்றி அழுத்தத்தைக் குறைத்த பிறகு அவருடைய உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது.

'Tapeworms' எனப்படும் புழுக்கள் தூய்மையற்ற தண்ணீரை அருந்தும் விலங்குகளின் குடலில் வாழும். விலங்குகளை முறையாகச் சமைக்காமல் உண்டால் அந்தப் புழுக்கள் நம் உடலினுள் புகுந்துவிடக்கூடும்.  

Top