Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் அதிகரித்துள்ள டாக்சி காய்கறித் தோட்டங்கள்!

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் புதுமை...

வாசிப்புநேரம் -

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் புதுமை...

டாக்சிகளில் காய்கறிகள் வளர்க்கப்படுகின்றன.....

வெங்காயம், துளசி, கத்தரிக்காய், மிளகாய் என சமையலுக்குத் தேவையான பல காய்கறிகள் இப்போது கார்களில் வளர்க்கப்படுகின்றன.

பேங்காக் - பாங் வாக் ரோட்டில் (Bang Waek) சுமார் 200 டாக்சிகள் சுமார் ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கிருமிப்பரவல் சூழலால், வாடகை கட்ட முடியாமலும், சம்பாதிக்க முடியாததாலும் டாக்சிகளை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டுநர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கே சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

மனவுளைச்சலில் தவித்த சிலர், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டாக்சிகளின் கூரைகளிலும், முன்புற மூடியின் மேலும் காய்கறிகளைப் பயிரிட்டுப் பாதுகாக்கின்றனர். அதன் மூலம் நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிக்க முடிகிறது. தேவையான உணவுப் பொருள்களையும் பயிர் செய்ய முடிகிறது என்று சிலர் கூறினர்.
 - CNA/pp

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்