Images
  • teabaf
    (படம்: Pixabay)

தேயிலை, போதைப்பொருள் என்று தவறாக அடையாளம் காணப்பட்டதால் இருவருக்கு 4 மாதச் சிறை

ஆஸ்திரேலியாவில் தேயிலை, போதைப்பொருள் என்று தவறாக அடையாளம் காணப்பட்டதால் 4 மாதச் சிறைத் தண்டனைக்கு இருவர்
ஆளாகியுள்ளனர்.

அதுகுறித்து The Sydney Morning Herald செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

சம்பவம் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் நடந்தது.

கோனி சோங் (Connie Chong) என்ற பெண்ணும் அவரது மகளும் நாட்டிற்குள் 25 கிலோகிராம் மதிப்புள்ள தேயிலைப் பொருள்களை இறக்குமதி செய்ததாக நம்பப்படுகிறது.

அவர்கள் மலேசியாவிலிருந்து தருவிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.

இருப்பினும், பொருள்கள் அனைத்தும் சிட்னி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. அவை amphetamines எனும் போதைப் பொருள்களாக அடையாளம் காணப்பட்டன.

எனவே போதைப்பொருள் வர்த்தகம் செய்வதாகப் பெண்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

போதைப்பொருளை அடையாளம் காணும் சோதனைமுறையில் துல்லிய முடிவுகள் கிடைக்கவில்லை என்று அண்மையில் நடைபெற்ற விசாரணையில் கூறப்பட்டது.

உறுதியான முடிவுகளைப் பெற மேற்கொண்டு பரிசோதனை தேவை என்றும் முன்னர் பரிந்துரைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.

சோங்கும் அவரது மகளும் மே மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆகஸ்ட் மாதம்தான் மீட்டுக்கொள்ளப்பட்டன.

இருவரும் வழக்கில் ஏற்பட்ட செலவுகளுக்கு இழைப்பீடு கோரி வழக்குத் தொடுக்கவுள்ளதாக The Sydney Morning Herald தெரிவித்தது. 

Top