Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வாழலாமா வேண்டாமா என்று Instagram-இல் கருத்தைப் பெற்ற 16 வயதுப் பெண் தற்கொலை

மலேசியாவைச் சேர்ந்த 16 வயதுப் பெண் தாம் வாழலாமா வேண்டாமா என்று Instagram-இல் கருத்துக் கணிப்பை நடத்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -

மலேசியாவைச் சேர்ந்த 16 வயதுப் பெண் தாம் வாழலாமா வேண்டாமா என்று Instagram-இல் கருத்துக் கணிப்பை நடத்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு மலேசிய அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த 13ஆம் தேதி அந்தப் பெண் Instagram-இல் அந்தக் கேள்வியை முன்வைத்தார். 69 விழுக்காட்டினர் அவர் சாகலாம் என்று வாக்களித்தனர்.

அதைத் தொடர்ந்து அந்தப் பெண் மாடியிலிருந்து கீழே குதித்து மாண்டார்.

பெண்ணின் மரணத்திற்குக் கருத்துக்கணிப்பில் சாகலாம் என்று பதிலளித்தவர்களும் ஒரு காரணம் என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் கூறினார்.

மலேசியச் சட்டப்படி பதின்ம வயதினரைத் தற்கொலை செய்யத் தூண்டுவோருக்கு மரண தண்டனையோ, 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்