Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஊடுருவலுக்கு உள்ளான டெலிகிராம் சமூக ஊடகம்

பெய்ச்சிங்: குறுந்தகவல் சேவையான டெலிகிராம் மீது பெரிய அளவிலான ஊடுருவல் இடம்பெற்றிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஊடுருவலுக்கு உள்ளான டெலிகிராம் சமூக ஊடகம்

(கோப்புப் படம்: REUTERS/Ilya Naymushin)


பெய்ச்சிங்: குறுந்தகவல் சேவையான டெலிகிராம் மீது பெரிய அளவிலான ஊடுருவல் இடம்பெற்றிருக்கிறது.

அது சீனாவில் தொடங்கியதுபோல் தோன்றுவதாக அந்தச் சமூக ஊடக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

ஹாங்காங்கில் தொடரும் அரசியல் பதற்றமும் அதற்கு ஒரு காரணம் என்று அவர் கூறினார்.

அந்நகரில் பல ஆர்ப்பாட்டக்காரர்கள் மின்னியல் கண்காணிப்பைத் தவிர்க்க டெலிகிராம் சேவையைப் பயன்படுத்தி வந்தனர்.

சில வகைக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவோரைச் சீனத் தலைநிலத்துக்குத் விசாரணைக்கு அனுப்ப வகைசெய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைக்கவும் அந்த ஊடகத்தை அவர்கள் நாடினர்.

ஊடுருவல் காரணமாகப் பல வட்டாரங்களில் பயனீட்டாளர்கள் டெலிகிராம் சேவையைப் பெறுவதில் பிரச்சினையை எதிர்நோக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது.

எப்போதெல்லாம் ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றனவோ, அப்போதெல்லாம் இப்படிப்பட்ட ஊடுருவல் நடப்பதாக, டெலிகிராம் குறிப்பிட்டது.

நேற்றுப் பாதிக்கப்பட்ட சேவை பின்னர் சீரடைந்ததாக டெலிகிராம், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது.

சீன வெளியுறவு அமைச்சும் இணையவெளி நிர்வாகமும் அது பற்றி உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்