Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'அரசாங்கம் ஒப்புதல் வழங்கினால்தான் Tencent நிறுவனத்தின் புதிய செயலிகளை வெளியிடலாம்' - சீனா

சீன அரசாங்கம், அதன் ஒப்புதலின்றி, Tencent நிறுவனத்தின் புதிய செயலிகளையும் செயலிகளுக்கான மேம்பாட்டுச் செயல்முறைகளையும் வெளியிடக்கூடாது என்று கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
'அரசாங்கம் ஒப்புதல் வழங்கினால்தான் Tencent நிறுவனத்தின் புதிய செயலிகளை வெளியிடலாம்' - சீனா

(படம்:NOEL CELIS/AFP)

சீன அரசாங்கம், அதன் ஒப்புதலின்றி, Tencent நிறுவனத்தின் புதிய செயலிகளையும் செயலிகளுக்கான மேம்பாட்டுச் செயல்முறைகளையும் வெளியிடக்கூடாது என்று கூறியுள்ளது.

தகவல்தொடர்புத் துறையில் சில பெரிய நிறுவனங்கள் அதிக ஆதிக்கத்தைக் கொண்டுள்ளன. அது குறித்துக் கவலை எழுந்துள்ளதால் சீன அரசாங்கம் அதன் அதிகாரத்தை அதிக அளவில் பயன்படுத்தவிருக்கிறது.

Tencent நிறுவனத்தின் 9 செயலிகளில் விதிகள் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சீன அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைந்துள்ளது.

Tencent நிறுவனம் அதன் புதிய செயலிகள், செயலிகளுக்கான மேம்பாட்டுச் செயல்பாடுகள் ஆகியவற்றை வெளியிடுவதற்கு முன் அவற்றைச் சீனத் தொழில்துறை, தகவல் தொழில்நுட்ப அமைச்சிடம் சோதனைக்கு அனுப்பவேண்டும் என்ற விதி முன்வைக்கப்பட்டது.

புதிய செயலிகள், மேம்பாட்டுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு அமைச்சு ஒப்புதல் வழங்கினால் மட்டுமே அவற்றை வெளியிடலாம் எனக் கூறப்பட்டது.

அரசாங்கத்தின் விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று Tencent, AFP நிறுவனத்திடம் கூறியுள்ளது.

- AFP  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்