Images
  • thai (2)
    (படம்: REUTERS/Athit Perawongmetha)

எல்லையைத் திறக்கவிருக்கும் தாய்லந்து - பயணத்துறையின் பங்குகள் உயர்ந்தன

தாய்லந்தில் பயணத்துறை சார்ந்த பங்குகளின் விலை உயரத் தொடங்கியுள்ளது.

சில நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுப்பயணிகள் அடுத்த மாதம் முதல் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று தாய்லந்து அரசாங்கம் நேற்று அறிவித்தது.

அதைத் தொடர்ந்து தாயலந்து ஹோட்டல்கள், விமான நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தன.

தாய்லந்தில் COVID-19 காரணமாகச் சுமார் 18 மாதங்களாக வெளிநாட்டுப் பயணிகளுக்கு நடப்பில் இருந்த தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகள் இப்போது தளர்த்தப்பட்டுள்ளன.

நோய்த்தொற்று குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அது பொருந்தும்.

அந்தப் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

2019ஆம் ஆண்டு சுமார் 40 மில்லியன் பயணிகளை ஈர்த்தது தாய்லந்து. ஆனால் கடந்த ஆண்டு நோய்த்தொற்று ஏற்படுத்திய பாதிப்பால் அது சுமார் 50 பில்லியன் டாலர் வருமானத்தை இழந்தது.

- Reuters

Top