Images
  • Thai Boys Food
    (படம்: Noella Chye/ CNA) 

தாய்லந்து குகையினுள் சிக்கிக்கொண்ட சிறுவர்கள் வெளியேறியதும் முதலில் கேட்டு சாப்பிட்ட உணவு


இரு வாரங்களுக்கு மேல் இருட்டான குகையில் ருசியான உணவு இல்லாமல் சிக்கிக்கொண்டிருந்த சிறுவர்கள் அங்கிருந்து வெளியேறியதும் கேட்ட முதல் உணவு உரைப்பான பன்றி இறைச்சியும் வாசனையான சோறும்.

தாய்லந்தில் Pad kraprao என்று அழைக்கப்படும் அந்த உணவு சிங்கப்பூரர்களிடேயே spicy pork with basil என்று பிரபலமாகவுள்ளது.

சிங்கப்பூரர்களிடையே எப்படி கோழிச் சோறு (Chicken rice) பிரபலமாகவுள்ளதோ அதைப் போன்று உரைப்பான பன்றி இறைச்சி தாய்லந்து மக்களிடையே பிரபலாமனது என்றனர் சிங்கப்பூரில் வேலை செய்யும் சில தாய்லந்து மக்கள்.

சிறுவர்கள் சிறு வயதிலிருந்து அதை உண்டு வளர்ந்திருப்பர்.

அதை உண்டதும் தங்களது அம்மாவின் கைப்பக்குவத்தில் சமைத்த உணவைச் சாப்பிட்டதைப் போல் சிறுவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று சிலர் கூறினர்.

வேறு சிலரோ காற்பந்துக் குழு பல நாட்கள் பயிற்சிக்குப் பிறகு அதைச் சாப்பிட்டிருப்பார்கள் என்று கூறினர்.

 

உங்கள் கருத்து

Top