Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் தொடர்ந்து குறைந்துவரும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

தாய்லந்தில் தொடர்ந்து குறைந்துவரும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

வாசிப்புநேரம் -

தாய்லந்தில் இன்று புதிதாக 3 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த நோயால் இன்று எந்த மரணமும் அங்குப் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தாய்லந்துக் குடிமக்கள்; மற்றொருவர் இத்தாலியைச் சேர்ந்தவர்.

இதுவரை தாய்லந்தில் 3,040 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 56 பேர் மாண்டனர்.

2,916 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாகத் தாய்லந்தில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளன.

இருப்பினும் தாய்லந்தில் கிருமித்தொற்று தொடர்பான நெருக்கடிநிலை, ஜூன் மாத இறுதிவரை நீட்டிக்கப்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

அரசாங்கம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வேளையில், நெருக்கடிநிலை நீட்டிக்கப்படக்கூடுமென கிருமித்தொற்றுக்கு எதிரான பணிக்குழு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்