Images
  • Thai cave movie (1)
    (படம்: AFP / Ye Aung THU)

தாய்லந்து மீட்புப் பணி ஹாலிவுட் படமாக்கப்படும்

Pure Flix எனும் ஹாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனம் தாய்லந்துக் குகையிலிருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களையும் அவர்களின் பயிற்றுவிப்பாளரையும் மையப்படுத்தி திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கப்போவதாகக் கூறியுள்ளது.

தாய்லந்தில் வசித்துவரும் அந்நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான மைக்கல் ஸ்கோட் (Michael Scott), மீட்புப் பணி நடைபெறும்போது அந்த இடத்தில் இருந்துள்ளார்.

கண்முன் கண்ட அந்த மீட்பு நடவடிக்கையைப் படமாக்குவது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக மைக்கல் தமது Twitterஇல் பதிவு செய்தார்.

தாய்லந்துக் கடற்படையைச் சேர்ந்த சிறப்பு Navy Seals பிரிவின் முக்குளிப்பாளரான மாண்ட திரு. சமான் குனானைத் தமது மனைவிக்கு சிறுவயதிலிருந்தே தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.

தாய்லந்துக் கடற்படையைச் சேர்ந்த முக்குளிப்பாளர்களின் துணிகரச் செயல் மனதை நெகிழவைத்ததாகவும் மைக்கல் கூறினார்.




 

Top