Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து குகை மீட்பு நடவடிக்கையை எடுத்துக்கூறும் அருங்காட்சியகமாக மாற்றப்படும்

சிறுவர்கள் 2 வாரங்களுக்கும் மேலாகச் சிக்கியிருந்த தாம் லுவாங் குகை வளாகம், மீட்பு நடவடிக்கையை எடுத்துக்கூறும் அருங்காட்சியகமாக மாற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தாய்லந்து குகை மீட்பு நடவடிக்கையை எடுத்துக்கூறும் அருங்காட்சியகமாக மாற்றப்படும்

(படம்: THAI NAVY SEAL/via REUTERS)

சிறுவர்கள் 2 வாரங்களுக்கும் மேலாகச் சிக்கியிருந்த தாம் லுவாங் குகை வளாகம், மீட்பு நடவடிக்கையை எடுத்துக்கூறும் அருங்காட்சியகமாக மாற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களும், அவர்களது காற்பந்துப் பயிற்றுவிப்பாளரும் வெற்றிகரமாக மீட்கப்பட்ட நிகழ்வு, எதிர்காலச் சந்ததியினரும் அறிந்துகொள்ள வகைசெய்யப்படுகிறது.

தாய்லந்துக் கடற்படையினர் வெளியிட்டுள்ள புதிய காணொளியும் அதில் இடம்பெறும்.

காணொளியில், சேறும் வெள்ள நீரும் நிறைந்த இருண்ட குகையிலிருந்து, சிறுவர்களை முக்குளிப்பாளர்கள் எவ்வாறு மீட்டனர் என்பது காட்டப்பட்டுள்ளது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்