Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்துக் குகை மீட்புச் சம்பவம் - இன்றுடன் ஓராண்டு நிறைவு

தாய்லந்துக் குகை மீட்புச் சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

வாசிப்புநேரம் -
தாய்லந்துக் குகை மீட்புச் சம்பவம் - இன்றுடன் ஓராண்டு நிறைவு

(படம்: Ekkaphol Chantawong)

தாய்லந்துக் குகை மீட்புச் சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

குகைக்குள் 10 நாட்களுக்கு மேல் சிக்கியிருந்த 12 சிறுவர்களும், அவர்களின் பயிற்றுவிப்பாளரும் பத்திரமாக மீட்கப்பட்டது உலகின் கவனத்தை ஈர்த்தது.

சியங் ராய் மாநிலத்திற்கு வடக்கே அமைந்துள்ளது தம் லுவாங் குகை.

கடந்த ஆண்டு ஜூன் 23ஆம் தேதி, 12 சிறுவர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளரும் காற்பந்துப் பயிற்சி முடிந்து வீடு திரும்பாத காரணத்தால் அவர்கள் குகைக்குள் சிக்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, உள்ளூரைச் சேர்ந்த மீட்புக்குழு முதலில் தேடல் முயற்சியைத் தொடங்கியது.

நிலைமை மிகவும் சிக்கலாக இருந்ததால் தாய்லந்துக் காவல் அதிகாரிகளுடன் ராணுவ அதிகாரிகளும் தேடல் பணியில் இணைந்தனர்.

கனத்த மழை பெய்ததால், குகையில் வெள்ளம் சூழ்ந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அனைத்துலக அளவில் புகழ்பெற்ற முக்குளிப்பாளர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சுமார் 10 நாட்களுக்கு நீடித்த தேடலுக்குப் பிறகு, << மாணவர்கள் குகையில் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சவாலான மீட்புப் பணியில், குகையில் சிக்கிய அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஆனால் மீட்புப் பணியின்போது முக்குளிப்பாளர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி சமான் குணான் மாண்டார். >>

அவரின் நினைவாக அந்தப் பகுதியில் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

குகையிலிருந்து பத்திரமாக மீட்க அரும்பாடுபட்ட அனைவரின் தியாகமும் தங்களை நெகிழச் செய்ததாக சிறுவர்கள் தெரிவித்தனர்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்