Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் படங்களற்ற சிகரெட் பொட்டலங்களின் விற்பனை

தாய்லந்தில் படங்களற்ற சிகரெட் பொட்டலங்களின் விற்பனை தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
தாய்லந்தில் படங்களற்ற சிகரெட் பொட்டலங்களின் விற்பனை

(படம்: AFP/Lilian Sawanrumpha)

தாய்லந்தில் படங்களற்ற சிகரெட் பொட்டலங்களின் விற்பனை தொடங்கியுள்ளது.

புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பதை ஊக்குவிப்பது அதன் நோக்கம்.

படங்கள் இல்லாத சிகரெட் பொட்டலங்களை விற்பனைக்குவிடும் முதல் ஆசிய நாடு, தாய்லந்து.

தாய்லந்தில், சுகாதார அறிவிப்புகள் இடம்பெற்ற படங்களைக்கொண்ட சிகரெட் பொட்டலங்கள் விற்பனைக்கு வந்து 15 ஆண்டுகளாகின்றன.

ஆனால் அத்தகைய அறிவிப்புகள் புகை பிடிப்போரிடம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

பெரும்பாலோர் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை என்கின்றனர் கடைக்காரர்கள்.

அதுவே, பொட்டலங்களின் வெளித்தோற்றம் மாற்றப்பட முக்கியமான காரணம்.

இந்த நடவடிக்கையை மேற்கொண்ட முதல் நாடு ஆஸ்திரேலியா.

மாற்றம் நடப்புக்கு வந்தபிறகு அங்கு புகைப்போரின் எண்ணிக்கை குறைந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன.

தாய்லந்திலும் அதேபோன்ற பலனை எதிர்பார்க்கின்றனர் சுகாதார அதிகாரிகள்.

தாய்லந்தில் 15 வயதுக்கு மேற்பட்டோரில் 19 விழுக்காட்டினர் புகை பிடிக்கின்றனர்.

அந்த விகிதத்தை 5 விழுக்காட்டுக்குக் குறைப்பது இலக்கு.

புகை பிடித்தல் சுகாதாரக் கேடு என்பதை வலியுறுத்தும் நோக்கில் 15 நாடுகள் ஏற்கனவே இந்த முயற்சியில் இறங்கியுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்