Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கிருமித்தொற்று மரணங்கள்

2.5 மில்லியன் முறை போடத் தேவையான Sinovac தடுப்பூசிகள் பெரும்பாலும் சுகாதாரத் துறை, முன்னிலை ஊழியர்கள், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆகியோருக்குப் போடப்படுகிறது.

வாசிப்புநேரம் -
தாய்லந்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கிருமித்தொற்று மரணங்கள்

(படம்:Reuters/Jorge Silva)

தாய்லந்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 21 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

அங்கு மூன்றாவது முறையாகக் கிருமிப்பரவல் தலைதூக்கியுள்ளது.

தாய்லந்தில் எளிதில் பரவக்கூடிய B117 கொரோனா வகையால் கடந்த மாதம் மட்டும் 36,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர், 109 பேர் மாண்டனர்.

இந்நிலையில் அங்குள்ள தடுப்பூசித் திட்டம் மெதுவாகச் செயல்படுத்தப்படுவதால் பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

2.5 மில்லியன் முறை போடத் தேவையான Sinovac தடுப்பூசிகள் பெரும்பாலும் சுகாதாரத் துறை, முன்னிலை ஊழியர்கள், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆகியோருக்குப் போடப்படுகிறது.

இன்றுமுதல் பொதுமக்களுக்கான தடுப்பூசித் திட்டப் பதிவுகள் தொடங்குகின்றன.

60 வயதுக்கும் மேற்பட்டோர் அல்லது நாள்பட்ட நோய் உள்ளவர்கள் என சுமார் 16 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

- Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்