Images
  • Thailand Election (1)
    (படம்: AFP)

தாய்லந்துப் பொதுத் தேர்தல்: முன்கூட்டியே வாக்களிப்பதற்கான வாக்குப்பதிவு, இன்று தொடக்கம்

தாய்லந்துப் பொதுத் தேர்தலில், முன்கூட்டியே வாக்களிப்பதற்கான வாக்குப்பதிவு, இன்று நடைபெறுகின்றது.

சிங்கப்பூர் நேரப்படி, இன்று காலை 9 மணிக்கு, வாக்களிப்பு தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இம்மாதம் 24ஆம் தேதி, தாய்லந்தில் பொதுத் தேர்தல் நடைபெறும். அதற்கு முன்னதாக, சில பகுதிகளில் முன்கூட்டியே வாக்களிப்பு நடத்தப்படுகின்றது.

அந்த வகையில் இன்று நடைபெறும் வாக்களிப்பில், மக்கள் திரளாக வந்து வாக்களிக்கக்கூடும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

2014ஆம் ஆண்டு, தாய்லந்தில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்ட பின்னர், அங்கு நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் அது என்பதால், அந்த எதிர்பார்ப்பு நிலவி வருவதாக ஆணையம் கூறிற்று.

தேர்தலை முன்னிட்டு, 380க்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்கள், நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, நேற்று மாலை 6 மணி முதல், மதுபான விற்பனை மற்றும் விநியோகத்திற்கான 24 மணி நேரத் தடை உத்தரவை, தாய்லந்து அமுல்படுத்தியது.

தேர்தல் மோசடிக் குற்றங்களைத் தவிர்க்க, அத்தகைய தடை உத்தரவுவகள் அவசியம் என்று ஆணையம் கூறியது.
  

Top