Images
  • Thai Elephants
    (படம்: AFP/PANUPONG CHANGCHAI)

தாய்லந்து: பூங்கா அருவியில் மூழ்கி மாண்ட மேலும் 5 யானைகள்


தாய்லந்தின் Haew Narok அருவியில் மேலும் 5 யானைகள் மூழ்கி மாண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அருவிக்கு மேல் ஆளில்லா வானூர்தியைச் செலுத்தி அதிகாரிகள் அந்த யானைகளின் சடலங்களைக் கண்டுபிடித்ததாக The Nation எனும் தாய்லந்து செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று தாய்லந்தின் Khao Yai தேசியப் பூங்காவிலுள்ள அந்த அருவியில் 6 யானைகள் வழுக்கி விழுந்து மாண்டன.

இத்துடன் 11 யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் இரு யானைகள் காப்பாற்றப்பட்டுள்ளன.

அருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குக் காரணம் என்னவென்பது இன்னும் தெரியவில்லை என்று தாய்லந்து விலங்குநல அமைப்பின் பூங்காப் பிரிவு தெரிவித்துள்ளது.

இனி மற்ற விலங்குகளும் அருவியில் விழாமலிருக்க அருவியைச் சுற்றி ஒரு தடுப்பு எழுப்பப்படும் என்று தாய்லந்தின் இயற்கைவள, சுற்றுப்புற அமைச்சர் தெரிவித்துள்ளதாக The Nation தகவல் வெளியிட்டது.  

Top