Images
  • Thai football team
    படம்: AFP/Royal Thai Navy

தாய்லந்துக் குகைக்குள் சிக்கிய காற்பந்துக் குழுவினர் ஏன் அங்கு சென்றனர்?

ஒரு மணி நேரம் மட்டுமே உலாவச் சென்ற சிறுவர்கள் இரு வாரங்களுக்கு மேல் சிக்கிக்கொண்டனர்.

தாய்லந்துக் குகைக்குள் சிக்கிக்கொண்ட சிறுவர்களும் அவர்களது பயிற்றுவிப்பாளரும் காற்பந்துப் பயிற்சிக்குப் பிறகு ஒரு மணி நேரம் குகையைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தார்கள்.

ஆனால் அதற்குள் கடுமையான மழை காரணமாக குகையினுள் மழைநீர் நிரம்பிவிட்டது.

குழுவின் தலைவராக உள்ள 13 வயதுச் சிறுவனின் தந்தை தமது மகன் அளித்த விளக்கத்தை நிருபர்களிடம் கூறினார்.

ஜூன் 23 அன்று குகையினுள் சென்ற சிறுவர்களை மீட்கும் பணிகள் மூன்று நாட்கள் இடம்பெற்றன.


Top