Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சகோதரி தேர்தலில் போட்டியிடவுள்ளது பொருத்தமற்றது, அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது: தாய்லந்து மன்னர்

தாய்லந்து மன்னர், தமது மூத்த சகோதரி அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடவிருப்பது பொருத்தமற்றது, அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
சகோதரி தேர்தலில் போட்டியிடவுள்ளது பொருத்தமற்றது, அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது: தாய்லந்து மன்னர்

(படம்: REUTERS/Athit Perawongmetha/File Photo)

தாய்லந்து மன்னர், தமது மூத்த சகோதரி அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடவிருப்பது பொருத்தமற்றது, அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் கூறியுள்ளார்.

இளவரசி உபோங்ரத் (Ubolratana), அடுத்த மாதம் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் பதவிக்குப் போட்டியிடவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

அவர் Thai Raksa Chart கட்சியின் பிரதமர் வேட்பாரளாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போதையப் பிரதமர் பிரயுத் சான் ஓசாவை (Prayuth Chanocha) எதிர்த்துப் போட்டியிடவிருக்கிறார்.

அரச மாளிகையில் இருந்து வெளிவந்த அறிக்கை மன்னரும் அரச குடும்பமும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருப்பதாகக் கூறியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்