Images
  • thai king
    தாய்லந்து மன்னர் மகா வஜ்ரலொங்கோன். கோப்புப் படம்: REUTERS/Athit Perawongmetha

பொதுத் தேர்தலில் தமது அக்காள் போட்டியிடுவது பொருத்தமற்றது - தாய்லந்து மன்னர்

தாய்லந்து மன்னர் மகா வஜ்ரலொங்கோன் (Maha Vajiralongkorn), பிரதமர் பதவிக்குத் தமது அக்காள் போட்டியிடவிருப்பதைப் பொருத்தமற்றது என்றும் அரச வழக்கங்களுக்கு எதிரானது என்றும் சாடியுள்ளார்.

அது தொடர்பாக அரச மாளிகையிலிருந்து வெளிவந்த அறிக்கையின்படி மன்னரும் அரச குடும்பமும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அரச பொறுப்புகளைத் துறந்திருந்தாலும் இளவரசி உபொங்ராத் இன்னமும் சாக்ரி பேரரசைச் சேர்ந்தவர் என்றும் அரச குடும்பத்தின் உறுப்பினர் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

மன்னரின் எதிர்ப்பு காரணமாக, இளவரசி தேர்தலில் போட்டியிடுவதைத் தேர்தல் ஆணையம் நிராகரிக்கக்கூடும்.


Top