Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து: பொத்தான்கள் இல்லாத மின்தூக்கிகள்...மேலும் கீழும் செல்வது எப்படி?

தாய்லந்தின் கடைத்தொகுதி ஒன்று கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் மின்தூக்கிகளில் உள்ள பொத்தான்களை அகற்றியுள்ளது.

வாசிப்புநேரம் -
தாய்லந்து: பொத்தான்கள் இல்லாத மின்தூக்கிகள்...மேலும் கீழும் செல்வது எப்படி?

படம்: Reuters

தாய்லந்தின் கடைத்தொகுதி ஒன்று கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் மின்தூக்கிகளில் உள்ள பொத்தான்களை அகற்றியுள்ளது.

பதிலாக, எந்தத் தளத்திற்குச் செல்லவேண்டும் என்பதைத் தரையில் உள்ள மிதிகட்டைகளைப் பார்த்துக் காலால் மிதிக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் சிலர் பொத்தான்கள் இல்லாத மின்தூக்கியைப் பார்த்து முதலில் சற்றுக் குழம்பிப் போனாலும் கைகளின்றி மின்தூக்கிகளைப் பயன்படுத்துவதை வரவேற்றுள்ளனர்.

பொத்தான்களுக்குப் பதிலாக மிதிகட்டைகளைப் பயன்படுத்துவதால் கைகளிலிருந்து கிருமி பரவும் அபாயம் குறைவதை, கடைத்தொகுதி நிர்வாகம் சுட்டியது.

பொத்தான்களைத் தொட்டுவிட்டு முகத்தைத் தொடும் சாத்தியத்தைத் தவிர்க்கமுடியாததால், மிதிகட்டைகளை உருவாக்கும் யோசனை
வந்ததாகக் கூறப்பட்டது.

மார்ச் மாதம் தாய்லந்திலுள்ள கடைத்தொகுதிகள் மூடப்பட்டன. அதன் பிறகு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவை மீண்டும் திறக்கப்பட்டன.

தென்கிழக்காசியாவின் இராண்டாவது பெரிய பொருளியல் தாய்லந்து.

கிருமித்தொற்றால், கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத பெரிய பாதிப்புக்கு அது உள்ளாகி இருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்