Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து பொதுத் தேர்தல் - தொடர்ந்து களத்தில் இறங்குவோம்: தாய் ரக்சா சார்ட் கட்சி

தாய்லந்து பொதுத் தேர்தலுக்கான போட்டியிலிருந்து இளவரசி உபோங் ராட்டின் (Ubolratana) பெயரை விலக்கியிருந்தாலும், தொடர்ந்து களத்தில் இறங்கவிருப்பதாக தாய் ரக்சா சார்ட் (Thai Raksa Chart) கட்சி சூளுரைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
தாய்லந்து பொதுத் தேர்தல் - தொடர்ந்து களத்தில் இறங்குவோம்: தாய் ரக்சா சார்ட் கட்சி

(படம்: Reuters)

தாய்லந்து பொதுத் தேர்தலுக்கான போட்டியிலிருந்து இளவரசி உபோங் ராட்டின் (Ubolratana) பெயரை விலக்கியிருந்தாலும், தொடர்ந்து களத்தில் இறங்கவிருப்பதாக தாய் ரக்சா சார்ட் (Thai Raksa Chart) கட்சி சூளுரைத்துள்ளது.

இருப்பினும், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடுமா என்பது கேள்வி குறியாகியிருக்கிறது.

மன்னர் மஹா வஜிரலொங்கோர்ன்னின் (Maha Vajiralongkorn) மூத்த சகோதரி இளவரசி ஊபோங் ராட்டைப், பிரதமர் பொறுப்புக்கான வேட்பாளராகக் களமிறக்க, தாய் ரக்சா சார்ட் கட்சி அறிவித்திருந்தது.

தமது சகோதரி தேர்தலில் வேட்பாளராக நிற்பது பொருத்தமற்றது என்று மன்னர் தெரிவித்தார்.

அது தேர்தல் சட்டத்தை மீறும் செயல் என்று கூறி, அந்தக் கட்சி மீது வழக்கு தொடுக்கவிருப்பதாக அரசியல் ஆர்வலர் ஒருவர் கூறியிருக்கிறார்.

தாய்லந்தின் இதற்கு முன்னர், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலில் ஈடுபட்டதில்லை.

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பிரசாரத்தில் பயன்படுத்துவதற்கும் அந்நாட்டின் தேர்தல் சட்டத்தில் தடை உண்டு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்