Images
  • thai princess
    படம்: Damir Sagolj/AFP

தாய்லந்து: இளவரசி உபோன்ராத் மன்னிப்பு

தாய்லந்து இளவரசி உபோன்ராத் (Ubolratana), பொதுத் தேர்தலுக்கு முன்னர், நாட்டு மக்களுக்குத் தம்மால் விளைந்த சிக்கல்களுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இளவரசியார் பிரதமர் வேட்பாளராவதற்கு தாய்லந்துத் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்த மறுநாள் அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அரசியலில் ஈடுபடக்கூடாது என்றும், அரசியல் பதவிகளை வகிக்கக்கூடாது என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

தாய்லந்து மக்களுக்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தாம் தேர்தலில் களமிறங்க நினைத்ததாக  இளவரசி உபோன்ராத் தெரிவித்தார். தம்மால் மக்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்களுக்கு மிகவும் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாய்லந்தில் அடுத்த மாதம் 24ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.


Top