Images
  • princess thai disqualified
    (படம்: AP)

தாய்லந்து: பிரதமர் பதவிக்குப் போட்டியிட இளவரசி உபோன்ராத்திற்குத் தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பு

தாய்லந்துப் பொதுத் தேர்தலில், பிரதமர் பதவிக்குப் போட்டியிட இளவரசி உபோன்ராத்திற்குத் (Ubolratana) தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.

கட்சிகளின் சார்பில் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் இன்று (பிப்ரவரி 11) வெளியிட்டது.

அந்தப் பட்டியலில் 67 வயது இளவரசி உபோன்ராத்தின் பெயர் இடம்பெறவில்லை.

அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அரசியலில் ஈடுபடக்கூடாது எனவும் அரசியல் பதவிகளை வகிக்கக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.

வரும் மார்ச் மாதம் 24ஆம் தேதி, தாய்லந்தில் தேர்தல் நடக்கவிருக்கிறது.

அது, 2014ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சிக்குப் பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்தலாகும். 

Top