Images
  • Thai Princess
    (படம்: Reuters/Bobby Yip)

தாய்லந்து பொதுத் தேர்தலில் இளவரசி உபொங்ராத் போட்டியிடுவது குறித்து கலந்துபேச இவ்வாரம் சந்திக்கும் தேர்தல் ஆணையம்


தாய்லந்தில் பொதுத் தேர்தலில் களமிறங்கவிருக்கும் கட்சிகள், வேட்பாளர்கள் பற்றி கலந்துபேச, தேர்தல் ஆணையம் இந்த வாரம் சந்திக்கவிருக்கிறது.

மன்னர் மஹா மகா வஜ்ரலொங்கோன்னின் (Maha Vajiralongkorn) சகோதரி, இளவரசி உபொங்ராத் தனது கட்சியின் கீழ் பிரதமர் பொறுப்புக்குப் போட்டியிடவிருப்பதாக தாய் ரக்சா சார்ட் (Thai Raksa Chart) அண்மையில் அறிவித்திருந்தது.

அந்தக் கட்சி, முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவாட்டுடன் (Thaksin Shina) தொடர்புடையது.

தேர்தலில் தமது சகோதரி போட்டியிடுவது, பொருத்தமற்றது என மன்னர் கூறுகிறார்.

இளவரசி ஊபொங்ராத் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது பற்றி தேர்தல் ஆணையம் வரும் வெள்ளிக்கிழமைக்குள் முடிவெடுக்க வேண்டும்.

இளவரசி உபொங்ராத்தைத் தேர்தலில் களமிறக்குவது தேர்தல் சட்டத்தை மீறும் செயல் என்று கூறி, தாய் ரக்சா சார்ட் கட்சி மீது வழக்கு தொடுக்கவிருப்பதாக அரசியல் ஆர்வலர் ஒருவர் கூறியிருக்கிறார்.

தாய்லந்தில் இதற்கு முன்னர், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலில் ஈடுபட்டதில்லை.

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பிரசாரத்தில் பயன்படுத்துவதற்கும் அந்நாட்டின் தேர்தல் சட்டத்தில் தடை உண்டு.

Top