Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகும் நீடித்த மோதல்

தாய்லந்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைக், காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் கலைத்தனர்.

வாசிப்புநேரம் -

தாய்லந்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைக், காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் கலைத்தனர்.

தடையை மீறித், தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பேரணி முடிந்த பிறகும் மோதல் நீடித்தது. வீதிகளில் திரண்டு நின்றவர்களைக் கலகத் தடுப்புக் காவலர்கள் கலைத்தனர்.

அவர்களை நோக்கி, ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் கிடைத்த பொருள்களை வீசியெறிந்தனர். பிரதமர் பிராயுத் சான் ஓச்சாவைப் (Prayut Chan-o-cha) பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முனைப்பாக உள்ளனர்.

பெரிய அளவில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு தாய்லந்து அரசாங்கம் 30 நாள் தடை விதித்துள்ளது. ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்