Images
  • thai prot
    படம்: AFP/Lillian SUWANRUMPHA

பேங்காக் : தாய்லந்துப் பிரதமர் பதவி விலகக் கோரி 5 ஆவது நாளாக ஆர்ப்பாட்டம்

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் (Bangkok), தொடர்ந்து 5ஆவது நாளாக ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

பிரதமர் பிராயுத் சான் ஓ சாவின் (Prayut Chan-o-cha) அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று இளையர்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பொது இடங்களில் ஒன்றுகூடுவதைத் தடைசெய்யும் நெருக்கடி நேர ஆணையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

தாய்லந்து நேரப்படி மாலை 4 மணியளவில் நகரின் வெவ்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின.

பிற்பகல் 3 மணிக்கு அவரவர் வீட்டிற்கு அருகே இருக்கும் ரயில் நிலையத்துக்கு அருகே கூடத் தயாராக இருக்கும்படி இன்று காலை ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதிகாரிகள் பேரணியைத் தடுக்கக்கூடும் என்பதால், மேல் விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

பிற்பகல் இரண்டரை மணிக்கே சில ரயில் நிலையங்கள், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவற்றை அதிகாரிகள் மூடினர்.

Top