Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து: மூகமுடித் திருடன் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருக்கலாம்

தாய்லந்தில் முகமூடி அணிந்து கொள்ளையடித்த திருடன் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக Bangkok Post நாளேடு தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
தாய்லந்து: மூகமுடித் திருடன் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருக்கலாம்

கோப்புப் படம்: BRENDAN SMIALOWSKI / AFP

தாய்லந்தில் முகமூடி அணிந்து கொள்ளையடித்த திருடன் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக Bangkok Post நாளேடு தெரிவித்துள்ளது.

லோப்புரி நகரின் மத்தியப் பகுதியில் உள்ள தங்க நகைக் கடை ஒன்றில் அந்தச் சம்பவம் நடந்தது. கடைக்குள் புகுந்து திருடிய அந்தத் திருடன், அங்கிருந்த மூவரைக் கொன்றான். நால்வர் அதில் காயமடைந்தனர்.

திருடன் துப்பாக்கி சுடுவதில் கைதேர்ந்தவன் என்றும் 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவன் என்றும் ஊகிக்கப்படுகிறது. முகமூடித் திருடன் 13 முறை துப்பாக்கியால் சுட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

சந்தேக நபர் குறிசுடும் போட்டியில் அனுபவமுள்ள விளையாட்டராக இருக்கலாமென்னும் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

இன்னமும் அந்தச் சம்பவம், ஒரு நகைக் கொள்ளை என்ற கோணத்திலேயே விசாரிக்கப்பட்டு வருகிறது.

சொந்த விரோதம், அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாக இருக்கலாமென்ற ஊகமும் நிலவுகிறது.

முகமூடித் திருடனால் சுடப்பட்டு மாண்டவர்களில், 2 வயதுக் குழந்தையும் அடங்கும் என்பதால் அந்தச் சந்தேகம் உருவானது.

திருடனைத் தேடிப் பிடிக்க கூடுதலான காவல்துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக Bangkok Post நாளேடு குறிப்பிட்டுள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்