Images
  • thai
    (படம்: REUTERS/Soe Zeya Tun)

தாய்லந்து: சீர்திருத்தம் கோரும் மாணவர்களைக் கட்டுப்படுத்தும்படி பல்கலைக்கழகங்களுக்கு ஆணை

மன்னராட்சி முறையில் சீர்திருத்தம் வேண்டும் என்று கோரி மாணவர்கள் தொடர்ந்து எழுப்பும் அழைப்பிற்குப் பல்கலைக்கழகங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தாய்லந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் எழுப்பும் குரல் வன்முறைக்கு இட்டுச் செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூலை மாத நடுப்பகுதியிலிருந்து தாய்லந்தில் அன்றாடம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தாய்லந்துப் பிரதமர் பிராயுத் சான் ஓச்சா பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

புதிய அரசமைப்புச் சட்டம், தேர்தல் ஆகியவை குறித்தும் மாணவர்கள் குரல் எழுப்பி வந்துள்ளனர்.
 

Top