Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Columbia Pictures நிறுவனத்தின் முதல் கேளிக்கைப் பூங்கா...தாய்லந்தில்

Sony நிறுவனத்திற்குச் சொந்தமான Columbia Pictures எனும் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் கேளிக்கைப் பூங்கா, தாய்லந்தில் அறிமுகம் ஆகவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

Sony நிறுவனத்திற்குச் சொந்தமான Columbia Pictures எனும் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் கேளிக்கைப் பூங்கா, தாய்லந்தில் அறிமுகம் ஆகவிருக்கிறது.

அதை Sony Pictures Entertainment, Amazon Falls ஆகிய நிறுவனங்கள் இணைந்து அறிமுகப்படுத்தவுள்ளன.

Columbia Pictures' Aquaverse எனும் அந்தக் கேளிக்கைப் பூங்கா, முக்கியப் பயணத் தளமான பட்டாயா (Pattaya) நகருக்கு அருகில் இடம்பெறும்.

அது, அக்டோபர் மாதம் முதல் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கேளிக்கைப் பூங்காவில், Columbia Pictures-இன் தயாரிப்பில் வெளிவந்த Men in Black, Ghostbusters போன்ற திரைப்படங்களை மையமாகக் கொண்ட சில அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

Sony, அதன் தொழில்நுட்ப வர்த்தகத்தையும் தாண்டி, அண்மை ஆண்டுகளில் இசை, திரைப்பட வர்த்தகங்களிலும் கால் பதித்துள்ளது.

-AFP/zl 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்