Images
  • thailand
    REUTERS/Soe Zeya Tun

COVID-19: தாய்லந்தில் சுண்டெலி மீது சோதனை - ஆடுத்த ஆண்டு தடுப்பூசி வெளியிட முயற்சி

தாய்லந்தில் கொரோனா கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பளிக்கும் தடுப்பூசியைக் கண்டுபிடிக்க, ஆய்வாளர்கள் தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக அவர்கள், தற்போது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தடுப்பூசி மருந்தைச் சுண்டெலிகள் மீது சோதித்துப் பார்த்ததில், சாதகமான முடிவு கிடைத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறினர்.

அடுத்த வாரம் அந்த மருந்தை, குரங்குகளிடம் சோதிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

நம்பிக்கையளிக்கும் முடிவுகள் வெளியாகும்பட்சத்தில் அடுத்த ஆண்டில் தடுப்பூசி தயாராகிவிடும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

COVID-19 கொள்ளை நோய்க்கு எதிராக, உலக அளவில் 100க்கும் அதிகமான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், பாதுகாப்பான தடுப்பூசியை உருவாக்க, குறைந்தது 12 முதல் 18 மாதம் வரை ஆகுமென உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


 

Top