Images
  • Thailand arrests two (1)
    (படம்: AFP/NICOLAS ASFOURI)

பையில் புலி உடற்பாகங்கள் - இருவர் கைது

தாய்லந்தில் புலி உடற்பாகங்கள் ஒரு பையில் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (அக்டோபர் 11) கூறியுள்ளனர்.

வியட்நாமைச் சேர்ந்த அந்த இரு ஆடவர்களும் புலி எலும்புகளையும் மாமிசத்தையும் பேருந்தில் வியட்நாமிற்குக் கடத்திச் செல்ல முயன்றதாக நம்பப்படுகிறது.

மியன்மாரின் எல்லையில் அதற்காக 900 டாலர் பணம் செலுத்தியதாகக் கூறப்படும் அந்த இருவரும் அவற்றை வியட்நாமில் விற்க எண்ணம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது அவர்கள் இருவரும் தாய்லந்துக் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்.

அருகிவரும் விலங்கை வைத்திருந்ததன் அடிப்படையில் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படும்.



 

Top