Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் மீட்கப்பட்ட சிறுவர்கள், தொலைக்காட்சியில்

தாய்லந்துக் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளரும் இன்று (18 ஜுலை) தோன்றும் முதல் பொது நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. 

வாசிப்புநேரம் -

தாய்லந்துக் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளரும் இன்று (18 ஜுலை) தோன்றும் முதல் பொது நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

அவர்கள் வடக்கு சியாங் ராய் மாநிலத்தில் பங்கேற்கும் செய்தியாளர் கூட்டம் தேசிய அளவில் ஒளிபரப்பாகும்.

அனைத்துலக மீட்பு முயற்சியில், வெற்றிகரமாக மீட்கப்பட்ட அந்த 13 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று அவர்கள் தோன்றும் செய்தியாளர் கூட்டத்துக்கு 45 நிமிட ஒளிபரப்பு நேரத்தை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

தாய்லந்து நேரப்படி, மாலை 6 மணிக்கு "Thailand Moves Forward" எனும் நிகழ்ச்சியில் அவர்கள் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பர்.

அந்நிகழ்ச்சி மற்ற பல ஒளிவழிகளிலும் ஒளியேறும்.

செய்தியாளர்கள் முன்கூட்டியே சமர்ப்பித்துள்ள கேள்விகள் அனைத்தும் கவனமாகச் சரிபார்க்கப்பட்டுள்ளதாய் அரசாங்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சிறுவர்களின் அந்தரங்கம் மதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

அந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்