Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் மேலும் மூவருக்கு COVID-19 கிருமித்தொற்று

தாய்லந்தில் மேலும் மூவர், COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

தாய்லந்தில் மேலும் மூவர், COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களையும் சேர்த்து, அங்கு மொத்தம் 40 பேருக்குக் கிருமி தொற்றியுள்ளதாகத் தாய்லந்தின் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

புதிதாய் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் ஜப்பானின் ஹொக்கைடோ (Hokkaido) தீவுக்குச் சென்று திரும்பியவர்கள்.

அவர்களுடன் தொடர்பில் இருந்த மூன்றாம் நபருக்கு, COVID-19 கிருமி பிறகு தொற்றியது.

சீனாவுக்கு வெளியே அந்தக் கிருமி முதன்முதலாகத் தொற்றிய வெளிநாடு தாய்லந்துதான்.

சென்ற மாதப் பிற்பாதியில் சீனாவிற்கு அடுத்து, கிருமித் தொற்றுக்கு ஆளான அதிகமானோர் தாய்லந்தில் இருந்தனர்.

இருப்பினும் அண்மை நாள்களில், அந்நாட்டில் கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவிட்டது.

இதுவரை, 22 பேர் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

15 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்