Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் தயாரிக்கப்படும் AstraZeneca தடுப்பூசிகள் மலேசியாவைச் சென்றடைவதில் தாமதம்

மலேசியா, தனக்கு விநியோகிக்கப்படவுள்ள

வாசிப்புநேரம் -

மலேசியா, தனக்கு விநியோகிக்கப்படவுள்ள AstraZeneca நிறுவனத்தின் COVID-19 தடுப்பூசித் தொகுப்பு தாமதமாக வந்தடையும் என எதிர்பார்க்கிறது.

தாய்லந்தில் தயாராகும் அந்தத் தடுப்பு மருந்து மற்ற நாடுகளுக்கு விநியோகிப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

AstraZeneca நிறுவனம், இதுவரை உள்நாட்டில் தயாரான
சுமார் 1.8 மில்லியன் தடுப்பூசிகளைத் தாய்லந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.

இம்மாதம் மேலும் தடுப்பூசித் தொகுப்புகள் விநியோகம் செய்யப்படும் என்று அது கடந்த வாரம் தெரிவித்தது.

ஆனால், தென்கிழக்காசிய நாடுகளுக்கான விநியோகம் அடுத்தமாதம் தொடங்கும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.

இம்மாதம் 610,000 தடுப்பூசிகளையும், அடுத்த மாதம் 410,000 தடுப்பூசிகளையும், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை 1.2 மில்லியன் தடுப்பூசிகளையும் AstraZeneca மலேசியாவுக்கு விநியோகம் செய்யவுள்ளதாக மலேசிய அரசாங்கம் முன்பு தெரிவித்திருந்தது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்