Images
  • thailand
    (கோப்புப் படம்: AFP/Romeo Gacad)

தாய்லந்தில் ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் கொரோனா நோய்த்தொற்று

தாய்லந்தில் ஒரு மாதத்திற்குப் பிறகு இரண்டு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கொரோனா நோய் நிர்வாக நிலையம், தாய்லந்து-மியன்மார் எல்லை அருகே வசிக்கும் மியன்மாரைச் சேர்ந்த இருவருக்கு நோய் பரவியுள்ளதெனக் குறிப்பிட்டது.

சென்ற வாரம் செவ்வாய்க்கிழமையன்று (13 அக்டோபர்) அந்த இருவருக்கும் மருத்துவச் சோதனை இடம்பெற்றது. நோய்க்கான அறிகுறிகள் எதுவும் அவர்களிடத்தில் தென்படவில்லை.

இருப்பினும், அவர்களுக்கு நோய் தொற்றியதாக மருத்துவச் சோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

தாய்லந்தில் இதற்கு முன்னர், கடைசியாக செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் நோய்த்தொற்றுச் சம்பவம் பதிவானது.  

Top