Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து, வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு நகரங்களைத் திறந்துவிடும் திட்டத்தைத் தள்ளிவைத்துள்ளது

தாய்லந்து, வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு நகரங்களைத் திறந்துவிடும் திட்டத்தைத் தள்ளிவைத்துள்ளது

வாசிப்புநேரம் -

தாய்லந்து, வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு, தலைநகர் பேங்காக்கையும் மற்ற சில முக்கிய நகரங்களையும் திறந்துவிடும் திட்டத்தைத் தள்ளிவைத்துள்ளது.

அத்திட்டம் நவம்பர் மாதம் வரை தள்ளிவைக்கப்படுவதாக அந்நாட்டின் பயணத்துறை தெரிவித்தது.

தாமதத்திற்குக் காரணம் போதுமான அளவில் உள்நாட்டு மக்கள் தடுப்பூசி போடாததே என்று கூறப்படுகிறது.

அடுத்த மாதம் முதல் பேங்காக், பட்டாயா, சியாங் மாய் போன்ற இடங்களுக்கு, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் பயணங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது அந்த நகரங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் விகிதம் 70 விழுக்காட்டை எட்டவில்லை என்பதால் அவற்றைத் திறந்துவிடும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சிறப்புப் பயணத் திட்டம் மூலம் புக்கெட், கோ சாமுய் தீவுகளுக்குச் செல்ல வெளிநாட்டுப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

தாய்லந்து மக்கள் தொகையில் இதுவரை 22 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

- Reuters/kg  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்