Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் யானைக்குட்டி துன்புறுத்தப்பட்ட படங்கள் வெளியீடு

தாய்லந்தில் யானைக்குட்டி துன்புறுத்தப்பட்ட படங்கள் வெளியீடு

வாசிப்புநேரம் -
தாய்லந்தில் யானைக்குட்டி துன்புறுத்தப்பட்ட படங்கள் வெளியீடு

படம்: Unsplash/Hu Chen

தாய்லந்தில் அங்குசத்தைப் பயன்படுத்தி் யானைக்குட்டி ஒன்றைத் துன்புறுத்தி அடக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது.

மறைத்துவைக்கப்பட்டிருந்த கேமரா மூலம் பதிவான அந்தக் காட்சியை புதன்கிழமையன்று World Animal Protection (WAP) என்ற உலக விலங்குப் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டது.

இரண்டு வயதே ஆன அந்த யானைக்குட்டி தனது தாயிடமிருந்து பலவந்தமாகப் பிரிக்கப்பட்டதைப் படம் காட்டுவதாகக் கூறப்பட்டது.

யானைக்குட்டி "Crush Box" என்ற சிறியதோர் இடத்தில் அடைக்கப்பட்டது. அந்த இடத்தில் அது சங்கிலிகளாலும் கயிற்றாலும் கட்டப்பட்டிருந்தது. யானைக்குட்டி அதிலிருந்து தப்பியோடத் தவித்ததையும் படம் காட்டியது.

சுமார் 3000 யானைகள் தாய்லந்தின் சுற்றுப்பயணத் துறையில் மக்களை ஈர்க்கப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை இளம் வயதிலிருந்தே துன்புறுத்திப் பழக்குகின்றனர்.

சுற்றுப்பயணத் துறையில் மக்களை மகிழ்விப்பதற்காக யானைகளைப் பயன்படுத்துவது இனியும் தொடராமல் இருப்பதை உறுதிசெய்ய WAP அமைப்பு முயன்றுவருகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்