Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் நெருக்கடி நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

தாய்லந்தில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் அதன் தொடர்பிலான நெருக்கடி நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தாய்லந்தில் நெருக்கடி நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

படம்:REUTERS/Soe Zeya Tun

தாய்லந்தில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் அதன் தொடர்பிலான நெருக்கடி நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம், தொடர்ந்து 2ஆவது முறையாக அதனை நீட்டித்துள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதுகுறித்து முடிவு செய்யப்பட்டது.

கிருமிப் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகளில் சில அடுத்த மாதத் தொடக்கத்திலிருந்து தளர்த்தப்படவுள்ளன.

இரண்டாம் அலைக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் நேராமல் தடுக்க, பொதுமக்கள் கவனமாகச் செயல்பட வேண்டுமென தாய்லந்தின் துணைப் பிரதமர் எச்சரித்தார்.

தற்போது பேரங்காடிகள், வங்கிகள், அரசாங்க அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கேளிக்கைப் பூங்காக்கள், கண்காட்சி நிலையங்கள் போன்றவை தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

தாய்லந்தில் இன்று புதிதாக மூவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

தற்போது, அங்கு கிருமித்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3,045ஆக உள்ளது.

57 பேர் மாண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்