Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் தனிமைப்படுத்தப்படும் பயணிகள் கோல்ஃப் விளையாட அனுமதி

தாய்லந்துக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் தனிமைப்படுத்தப்படும்போது, கோல்ஃப் விளையாடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தாய்லந்தில் தனிமைப்படுத்தப்படும் பயணிகள் கோல்ஃப் விளையாட அனுமதி

Reuters

தாய்லந்துக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் தனிமைப்படுத்தப்படும்போது, கோல்ஃப் விளையாடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தகவலை, தாய்லந்து சுற்றுப்பயணக் கழகம் வெளியிட்டதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

கோல்ஃப் விளையாட, 6 உல்லாச விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்படும் பயணிகள், தங்களது அறைக்குள் அடைந்து கிடந்து பொழுதைக் கழிக்கத் தேவையில்லை.

உல்லாச விடுதிகள் முழுக்கச் சுற்றிவரவும், கோல்ஃப் விளையாடவும் அனுமதி உண்டு.

தாய்லந்து, ஆண்டிற்குச் சுமார் 40 மில்லியன் சுற்றுப்பயணிகளை ஈர்த்துவந்த நாடு.

கிட்டத்தட்ட 64 பில்லியன் டாலர் வருமானம், பயணத் துறையிலிருந்து அதற்கு 2019இல் கிடைத்தது.

ஆனால், COVID-19 நோய்ப்பரவலால், தாய்லந்தின் பயணத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்