Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து-லாவோஸ் எல்லையில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்

தாய்லந்து, லாவோஸ் எல்லைக்கு அருகே உள்ள பகுதியை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
தாய்லந்து-லாவோஸ் எல்லையில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்

(படம்: CNA)


தாய்லந்து, லாவோஸ் எல்லைக்கு அருகே உள்ள பகுதியை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

தாய்லந்து நேரப்படி காலை 6.45 மணி அளவில், முவாங் நான் (Muang Nan) நகருக்குச் சுமார் 90 கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ள பகுதியில் நிலநடுக்கம் நேர்ந்தது.

யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ, பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல் இல்லை.

600 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தலைநகர் பேங்காக்கிலும் உயரமான கட்டடங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.

பாதிக்கப்பட்ட வட்டாரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் சோதனையிடவிருக்கின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்