Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் குரங்குகளுக்கு Buffet சாப்பாடு!

தாய்லந்தின் லோப்புரி (Lopburi) நகரில் சிறப்பு விருந்து ஒன்று இடம்பெற்றுள்ளது. 

வாசிப்புநேரம் -

தாய்லந்தின் லோப்புரி (Lopburi) நகரில் சிறப்பு விருந்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதில் முக்கிய விருந்தாளிகள்? மக்கேக் (macaque) வகைக் குரங்குகள்!

1980களில் தொடங்கிய அந்தத் தாய்லந்துப் பாரம்பரியத்தில் குரங்குகளுக்கு விருந்துபசரிப்பு நடத்தப்படுவது வழக்கம். அதில் சுற்றுப்பயணிகளும் கலந்துகொள்ளலாம்.

குரங்குகளுக்கான சிறப்பு விருந்து, ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இவ்வாண்டின் Monkey Buffet Festival எனும் அந்த விருந்தில் 1,000க்கும் மேற்பட்ட குரங்குகள் பசியுடன் கலந்துகொண்டன!

விருந்து Pra Prang Sam Yod எனும் 800 ஆண்டுப் பழைமையான கோவிலுக்கு வெளியே இடம்பெற்றது.

உணவு மேசைகளிலும் சக்கர நாற்காலிகளிலும் குரங்குகளுக்கு மிக விருப்பமான டுரியான் பழங்கள் உட்பட, பல்வேறு பழவகைகள் அடுக்கிவைக்கப்பட்டன.

இவ்வாண்டின் விருந்தில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்.

அவர்களிடமிருந்து தொப்பிகளைத் திருடுவது, அவர்களது முடியைப் பிடித்து மெல்வது போன்ற குரங்குச் சேட்டைகளுக்கும் விருந்தில் குறைவில்லை!

- AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்