Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இரவுக் கேளிக்கைக் கூடங்களுக்கான தடையை நீட்டிக்கும் தாய்லந்து

தாய்லந்து இரவுக் கேளிக்கைக் கூடங்களுக்கான தடையை ஜனவரி நடுப்பகுதிவரை நீட்டித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
இரவுக் கேளிக்கைக் கூடங்களுக்கான தடையை நீட்டிக்கும் தாய்லந்து

(படம்:AFP/Mladen ANTONOV)

தாய்லந்து இரவுக் கேளிக்கைக் கூடங்களுக்கான தடையை ஜனவரி நடுப்பகுதிவரை நீட்டித்துள்ளது.

அடுத்த மாதமே கேளிக்கைக் கூடங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் வேளையில் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கிருமிப்பரவல் சூழலில் இரவுக் கேளிக்கைக் கூடங்களை முன்கூட்டியே திறக்க அனுமதிப்பது அபாயமிக்கது என்று தாய்லந்து அரசாங்கம் கூறுகிறது.

அந்தத்துறையின் தயார்நிலையைப் பொறுத்து இரவுக் கேளிக்கைக் கூடங்களைத் திறக்க முன்கூட்டியே அனுமதிப்பது பற்றிப் பரிசீலிக்கப்படலாம்.

சுற்றுலாத்துறைக்குப் புத்துரயிரூட்ட, வெளிநாட்டுப் பயணிகளைத் தாய்லந்து அனுமதிக்கிறது.

என்றாலும் நெருக்கடிகால உத்தரவை மேலும் இரண்டு மாதத்துக்கு நீட்டித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்