Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து: நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் (Bangkok) நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் (Bangkok) நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டுள்ளனர்.

அவர்களைக் கலைக்க, காவல்துறையினர் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தியதோடு தண்ணீரையும் பீய்ச்சியடித்தனர்.

அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களும் செனட்டர்களும் இரண்டு நாள் கூட்டத்தை நடத்துகின்றனர்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே காவல்துறையினர்
தடுப்புகளை அமைத்துள்ளனர்.

முன்னாள் ராணுவத் தளபதியான பிரதமர் பிராயுத் சான்-ஓச்சா (Pyaut Chan-o-cha) பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கும் அரசாங்கத்திலும் மன்னராட்சியிலும் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும், மன்னராட்சி ஆதரவாளர்கள், அரசமைப்புச் சட்டம், நாட்டின் அரசியலை சீர்திருத்தி மேம்படுத்தியதோடு, ஊழலைக் கட்டுப்படுத்த உதவியுள்ளதாகவும் கூறியுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்