Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் 2ஆவது நாளாக, முன்னெப்போதும் இல்லாத அளவு கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

தாய்லந்தில் தொடர்ந்து 2ஆவது நாளாக, முன்னெப்போதும் இல்லாத வகையில், புதிதாக 13,000க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தாய்லந்தில் 2ஆவது நாளாக, முன்னெப்போதும் இல்லாத அளவு கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

(கோப்புப் படம்: REUTERS/Chalinee Thirasupa)

தாய்லந்தில் தொடர்ந்து 2ஆவது நாளாக, முன்னெப்போதும் இல்லாத வகையில், புதிதாக 13,000க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து, அங்கு 453,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 87 பேர் மாண்டனர். அவர்களையும் சேர்த்து, மாண்டோர் எண்ணிக்கை கிட்டதட்ட 3,700க்கு உயர்ந்துள்ளது.

தாய்லந்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கணிசமாக அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், தடுப்பூசித் திட்டம் மெதுவடைந்ததற்கு, அந்நாட்டுத் தேசியத் தடுப்பூசி நிலையத் தலைவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் COVAX தடுப்பூசிப் பகிர்வுத் திட்டத்தில் தாய்லந்து சேரத் திட்டமிடுவதாகவும் அவர் கூறினார்.

திட்டத்தின் மூலம், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிற்குள் தாய்லந்து தடுப்பூசிகளை நன்கொடையாகப் பெறக்கூடும்.

தாய்லந்தின் மக்கள்தொகை சுமார் 69 மில்லியன்.

அதில் சுமார் 11.3 மில்லியன் பேர், அதாவது 16 விழுக்காட்டினர் மட்டுமே குறைந்தது ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

-Agencies 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்